Amazon

Flipkart

Adsense

Monday, 21 July 2014

மும்பையை கலக்கிய பீட்சா ரீமேக்!

கடந்த 2012ல் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது விஜயசேதுபதி நடித்த பீட்சாதான். அதுவரை எத்தனையோ விதமான ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், அப்படம் அத்தனை படங்களையும் முறியடித்து நம்பர்-ஒன்னாக இடம்பிடித்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அப்படத்தை பின்னர் கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றது. அதையடுத்து, இந்தியில் அக்ஷய் அக்கினேனி என்பவர் பீட்சாவை ரீமேக் செய்தார். அக்ஷய் ஒபேராய் நாயகனாக நடித்த அப்படத்தில் தமிழில் ரம்யா நம்பீசன் நடித்த வேடத்தில் பில்லா-2வில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் நடித்தார்.

மேலும். சித்தார்த் ராய் கபூர், டேவிட் பட இயக்குனர் பிஜாய் நம்பியார் ஆகியோர் தயாரித்த அப்படம் கடந்த 18ந்தேதி திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வெளியான அப்படம் மும்பை சினிமா வட்டாரங்களையே மிரட்டும் வகையில் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறதாம். கூடவே இந்தியில் 3டி படமாக வெளியிடப்பட்டதால் ஏற்கனவே அச்சுறுத்தல் நிறைந்த அப்படத்தைப்பார்த்து இந்தி சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.

அதோடு, அப்படத்தைப்பார்த்த மீடியாக்கள் இதுவரை இந்தியில் வெளியான ஹாரர் படங்களில் இந்த பீட்சா புதுமாதிரியாக உள்ளது என்று விமர்சித்து பாராட்டி வருகிறார்களாம் ஆக, பீட்சா, இதுவரை வெளியான தமிழ், கன்னடம், பெங்காலி மொழிகளைவிட இந்தியில் அதிக வசூலை ஈட்டும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment