தற்போது வெற்றிப்பட தயாரிப்பாளராக விளங்கி வரும் திருக்குமரன்
எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் கடைசியாய் தயாரித்த படம் -
முண்டாசுப்பட்டி. இப்படம் வெளியான முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில்
கூட்டமில்லை. அதன் பிறகு படம் பிக் அப்பாகி, வசூல் ரீதியில் மிகப்பெரிய
வெற்றியடைந்தது. முண்டாசுப்பட்டி படத்தின் பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு
வசூலை ஈட்டிக்கொடுத்திருக்கிறது. எனவே உற்சாகமான சி.வி.குமார்
முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராமுக்கு அடுத்தப்பட வாய்ப்பையும்
கொடுத்து, முண்டாசுப்பட்டி-2 எடுக்க ஆயத்தமாகிவிட்டார். அதோடு, அப்படத்தின்
ஹீரோவான விஷ்ணுவையும் இரண்டு படங்களில் கமிட் பண்ணி இருக்கிறார்.
விஷ்ணு
நடிக்க உள்ள இரண்டு படங்களில் ஒன்று..முண்டாசுப்பட்டி-2. மற்றொன்று...சூது
கவ்வும் இயக்குநரின் அடுத்த படம். இந்தப் படத்தில் முதலில் விஜய்சேதுபதி
நடிப்பதாக இருந்தது. அவர் பல படங்களை கமிட் பண்ணிக்கொண்டு இரவு பகலாக
நடித்து வருகிறார். அப்படியும் அவரது கமிட்மெண்ட் திட்டமிட்டபடி
முடியவில்லை.
அவருக்காக மாதக்கணக்கில் காத்திருந்த சூது கவ்வும்
இயக்குநருக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. எனவே அடுத்த படத்தில் சேர்ந்து
வொர்க் பண்ணலாம். இந்தப் படத்தில் வேறு ஹீரோவை வைத்துக்கொள்கிறேன் என்று
விஜய்சேதுபதியிடம் சொல்லிவிட்டு விஷ்ணுவை கமிட் பண்ணிவிட்டார்.
No comments:
Post a Comment