Amazon

Flipkart

Adsense

Wednesday, 29 October 2014

எந்திரன் வசூலை கத்தி மிஞ்சுமா...?

கத்தி படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இந்த அளவிற்கு வசூலை அள்ளித் தரவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒரு சில சிறிய படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடிய நிலையில் கத்தி படத்தின் ஓட்டம் வசூல் ரீதியாக புதிய சாதனைகளைப் புரிந்து வருகிறதாம். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே துப்பாக்கி படம்தான் அதிக அளவில் வசூலைக் குவித்த படமாக இருந்தது. ஆனால், அந்தப் படத்தின் வசூலை கத்தி ஒரு வாரத்திற்குள்ளாகவே முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கத்தி படத்தின் வசூல் எந்திரன் வசூலை மிஞ்சவும் வாய்ப்புள்ளதாம். கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக கத்தி படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடிகளையும், வெளிநாடுகளில் 24 கோடிகளையும் வசூல் செய்துள்ளதாம். தமிழ்நாட்டிலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் படத்திற்கு விஜய் ரசிகர்களைத் தவிர மற்றவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்க்கிறார்கள் என தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள். இப்படி குடும்பத்து ரசிகர்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று, படத்தில் துளி கூட ஆபாசம் இல்லாததும், நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருப்பதும்தான் இந்தப் படத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் வரக் காரணமாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆக, ரசிகர்கள் நல்ல கதைகளைக் கொண்ட படங்களை வரவேற்பார்கள் என்பதை இந்தப் படத்தின் வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.

ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி...

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணியில் இருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போதுள்ள நடிகைகள் பலரும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சரி சமமான புகழில் இருந்து வருகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா ஆகியோர் தமிழிலும், தெலுங்கிலும் புகழ் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இப்போது இவர்களுக்கிடையேதான் பலத்த போட்டி இருந்து வருகிறது. பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதில்தான் இவர்களுக்குள் அதிகமான போட்டி இருக்கிறது. அதிலும் ஒரு படம் ஹிட்டானவுடனே சம்பளத்தையும் ஏற்றி விடுகிறார்களாம். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்கும் ஹீரோயின்களுக்கு தயாரிப்பாளர்களும் ராசியானவர் என்று சொல்லி அவர்கள் கேட்கும் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.தெலுங்கில் கிளாமராகவும், ராசியான நடிகையாகவும் இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் ஸ்ருதி. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள். அவர் ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று சொன்னாராம். முதலில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், அதன் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதம் சொன்னார்களாம். இதுதான் ஸ்ருதிஹாசனின் இதுவரையிலான அதிக சம்பளம் என டோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளதாம். ஸ்ருதியின் சம்பள விவகாரத்தைக் கேட்ட மற்ற போட்டியாளர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமல்ல பேரதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டதாம். 

மலையாளத் திரையுலகை மிரட்டிய 'கத்தி' வசூல்...

மலையாளத் திரையுலகம் கடந்த சில வாரங்களாகவே கடுமையான சோதனையை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து மற்ற மொழிகளிலிருந்து வெளியாகும் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நேரடி மலையாளப் படங்கள் வெளியாவது சிக்கலாக உள்ளதாம். தமிழிலிருந்து 'கத்தி', ஹிந்தியிலிருந்து 'ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்கள் கடந்த வாரம் முதல் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாக கேரள ரசிகர்களின் வரவேற்புடன் இரண்டாவது வாரத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது.குறிப்பாக 'கத்தி' திரைப்படத்தின் வசூல் இதுவரை வெளியான நேரடி மலையாளப் படங்களையே மிஞ்சி விடும் என்கிறார்கள். படத்தின் வசூல் மட்டும் அவர்களை கவலையடைச் செய்யவில்லையாம். ஒரு தமிழ் நடிகருக்கு கேரளாவில் இந்த அளவிற்கு வரவேற்பு எப்படி ஏற்பட்டது என்பதை ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்களாம். 'கத்தி' படம் வெளியான தியேட்டர்களில் கட் அவுட்டுகள், பிரம்மாண்ட போஸ்டர்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு இணையான பேரும் புகழும் எப்படி வந்தது என்பதுதான் பேச்சாக இருக்கிறதாம். 'கத்தி' படத்தின் கதை கேரள ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். 
'கத்தி' கொண்டாட்டத்தில் ஒரு ரசிகர் மரணடைந்ததும், அதற்கு கேரளாவில் உள்ள மற்ற ரசிகர்களும், விஜய்யும் நிதி உதவி வழங்கியிருப்பதும் கூட அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார்கள். விஜய்க்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பு சில மலையாள நடிகர்களுக்கு எரிச்சலைக் கூட ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும் அதே நாட்களில் கேரளாவிலும் வெளியாவதை மலையாளத் திரையுலகினில் தடுத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். அடுத்து 'ஐ, லிங்கா, உத்தம வில்லன்' போன்ற படங்களின் வருகை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சமே இதற்குக் காரணமாம்...

சர்வதேச திரைப்பட விழாவில் மெட்ராஸ் திரைப்படம்


ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களுக்குப் பிடித்த படங்கள் விமர்சகர்களுக்குப் பிடிப்பதில்லை. விமர்சகர்களுக்குப் பிடித்த படங்களை ரசிகர்கள் விரும்புவது இல்லை. ரசிகர்களையும், விமர்சகர்களையும், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களையும் ஒருசேர திருப்திப்படுதும் படங்கள் அபூர்வம். 
அண்மையில் வெளியான படங்களில் இப்படி அனைத்து தரப்பினரையும் மகிழ வைத்த படம் மெட்ராஸ். 
சென்னை வாழ் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை பதிவு செய்த மெட்ராஸ் படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும், விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தது. 
முந்தைய படங்களின் தொடர் தோல்வி காரணமாக துவண்டு போயிருந்த கார்த்திக்கு மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றி புதிய தெம்பைக் கொடுத்தது. 
அதுமட்டுமல்ல, மெட்ராஸ் படத்தைப் பார்த்த சூர்யா அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்து தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியதோடு, கால்ஷீட் தரவும் சம்மதித்துள்ளார். 
இந்நிலையில், மெட்ராஸ் படத்துக்கு தற்போது புதிய கௌரவம் கிடைத்திருக்கிறது. 
அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெறவிருக்கிறது. 
வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது 

டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வருகிறது கயல்

மைனா, கும்கி வெற்றிப்படங்களைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமான். இப்படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர் பொறியாளன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். ஆனால், அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமானது பிரபுசாலமன் படத்தில்தான். 
ஆனந்திக்கு ஜோடியாக சந்திரன் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். 
கயல் படத்துக்கும் பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான்தான் இசை. 
இமானின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கிறது. 
பட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நவம்பர் கடைசிவாரத்தில் கயல் படத்தை வெளியிட விரும்பினார் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன். 
பிரபுசாலமனோ கயல் படத்தை டிசம்பர் மாதம் 25ஆம் தேதிதான் வெளியிட வேண்டும் என்கிறாராம். 
25 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் படத்துக்கு ஓப்பனிங் இருக்காது என்பது தயாரிப்பாளரின் அச்சம். 
பிரபுசாலமனோ டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிருஸ்துமஸ் என்பதால் அன்றுதான் வெளியிட வேண்டும். இயேசு நிச்சயம் படத்தை வெற்றியடைய வைப்பார் என்கிறாராம் 
எனவே, கயல் படத்தை வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டாராம் தயாரிப்பாளர். 
கும்கியில் யானையை மையமாக வைத்து படமாக்கிய அவர், இந்த கயல் படத்தில் சுனாமியை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.