Amazon

Flipkart

Adsense

Wednesday, 29 October 2014

எந்திரன் வசூலை கத்தி மிஞ்சுமா...?

கத்தி படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இந்த அளவிற்கு வசூலை அள்ளித் தரவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒரு சில சிறிய படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடிய நிலையில் கத்தி படத்தின் ஓட்டம் வசூல் ரீதியாக புதிய சாதனைகளைப் புரிந்து வருகிறதாம். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே துப்பாக்கி படம்தான் அதிக அளவில் வசூலைக் குவித்த படமாக இருந்தது. ஆனால், அந்தப் படத்தின் வசூலை கத்தி ஒரு வாரத்திற்குள்ளாகவே முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கத்தி படத்தின் வசூல் எந்திரன் வசூலை மிஞ்சவும் வாய்ப்புள்ளதாம். கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக கத்தி படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடிகளையும், வெளிநாடுகளில் 24 கோடிகளையும் வசூல் செய்துள்ளதாம். தமிழ்நாட்டிலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் படத்திற்கு விஜய் ரசிகர்களைத் தவிர மற்றவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்க்கிறார்கள் என தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள். இப்படி குடும்பத்து ரசிகர்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று, படத்தில் துளி கூட ஆபாசம் இல்லாததும், நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருப்பதும்தான் இந்தப் படத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் வரக் காரணமாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆக, ரசிகர்கள் நல்ல கதைகளைக் கொண்ட படங்களை வரவேற்பார்கள் என்பதை இந்தப் படத்தின் வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.

No comments:

Post a Comment