ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களுக்குப் பிடித்த படங்கள் விமர்சகர்களுக்குப் பிடிப்பதில்லை. விமர்சகர்களுக்குப் பிடித்த படங்களை ரசிகர்கள் விரும்புவது இல்லை. ரசிகர்களையும், விமர்சகர்களையும், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களையும் ஒருசேர திருப்திப்படுதும் படங்கள் அபூர்வம்.
அண்மையில் வெளியான படங்களில் இப்படி அனைத்து தரப்பினரையும் மகிழ வைத்த படம் மெட்ராஸ்.
சென்னை வாழ் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை பதிவு செய்த மெட்ராஸ் படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும், விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தது.
முந்தைய படங்களின் தொடர் தோல்வி காரணமாக துவண்டு போயிருந்த கார்த்திக்கு மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றி புதிய தெம்பைக் கொடுத்தது.
அதுமட்டுமல்ல, மெட்ராஸ் படத்தைப் பார்த்த சூர்யா அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்து தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியதோடு, கால்ஷீட் தரவும் சம்மதித்துள்ளார்.
இந்நிலையில், மெட்ராஸ் படத்துக்கு தற்போது புதிய கௌரவம் கிடைத்திருக்கிறது.
அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெறவிருக்கிறது.
வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது
No comments:
Post a Comment