Amazon

Flipkart

Adsense

Saturday, 19 July 2014

வேலையில்லா பட்டதாரி -- விமர்சனம்

நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.
 
ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு 'லட்டு' மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.

அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.

தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு  வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.

அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.

தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.

வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.

பிரேக் கொடுத்த இயக்குநருக்கு கை கொடுத்த ஜெய்

யூத், பகவதி தொடங்கி ஜெய் பல படங்களில் நடித்தாலும், அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது சுப்பிரமணியபுரம் மற்றும் எங்கேயும் எப்போதும் படங்கள்தான். சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் தவிர வேறு பலரும் நடித்ததால் அப்படத்தின் வெற்றியை அவர் மட்டுமே அறுவடை செய்ய முடியாதநிலையில், எங்கேயும் எப்போதும் படம்தான் அவரை ஸோலோ ஹீரோவாக வெற்றி நடைபோட வைத்தது. ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த இப்படத்தை அவரது உதவியாளராக சரவணன் இயக்கினார். எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றியை அடுத்து லிங்குசாமியின் நிறுவனத்துக்கு இவன் வேற மாதிரி என்ற படத்தை இயக்கினார்.

விக்ரம் பிரபு நடித்த இந்தப் படம் தோல்வியடைந்தது. அதன் காரணமாக சரவணனுக்கு அடுத்து படம் இல்லாமல் போனது. அதுமட்டுமல்ல, அவரது இயக்கத்தில் நடிப்பதாக சொன்ன ஹீரோக்களும் இவன் வேற மாதிரி படத்தின் தோல்வியினால் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர். இந்நிலையில், ஜெய்யை சந்தித்து தன் தற்போதைய நிலையை விளக்கி அவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் சரவணன். அவரது தற்போதையை சூழலை எண்ணி வருத்தப்பட்ட ஜெய் உடனடியாய் அவருக்கு கால்ஷீட் தர ஒப்புக்கொண்டார். அதோடு தயாரிப்பாளரையும் கையைக்காட்டினார். பிறகென்ன..மளமளவென வேலைகள் தொடங்க, சரவணன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் வலியவன் வேகமாக வளர்ந்த வருகிறது.

விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஜெயம்ரவி!

ஜெயம் ரவியைப்பொறுத்தவரை ரொம்ப யதார்த்தமான மனிதர். சினிமா மேடைகளில் மனதில் பட்டதை ஓப்பனாக சொல்லி விடுவார். அதேப்போல், தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை சார் என்று அழைக்காமல் அண்ணன் என்றே உரிமையோடு அழைப்பார். இதனால்தான் ஜெயம் ராஜாவுக்கு மட்டுமின்றி அவரை வைத்து படம் இயக்கிய அத்தனை இயக்குனர்களுக்குமே தம்பியாக இருந்து வருகிறார் ஜெயம்ரவி.

இந்த நிலையில், விமல் நடித்துள்ள நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தை இயக்கியுள்ள நாகேந்திரனை, வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்றே அழைக்கிறார் ஜெயம்ரவி. அவர் இப்போதுதான் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் பிறகெப்படி உங்களுக்கு அண்ணன் ஆனார்? என்று அவரைக்கேட்டால், சினிமா உலகில் நடிக்கிற முக்கிய விழாக்கள் மட்டுமின்றி, யாருக்கு எந்த பிரச்னை என்றாலும் அதை தனது பிரச்னை போன்று நினைத்து முதல் ஆளாக வந்து நிற்பார் நாகேந்திரன்.

அதனால் அவர் உதவி இயக்குனராக வேலை செய்த படங்களில் நான் நடிக்கவில்லை என்றாலும், நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பியாகவே பழகி வருகிறோம் என்று சொல்லும் ஜெயம்ரவி, தற்போது அவர் இயக்கியுள்ள நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் டீசரைப்பார்த்தவர், இந்த படத்தில் என்னை நடிக்கக் கேட்டிருக்கக்கூடாதா? என்றும் கேட்டு விட்டாராம். அதற்கு, உங்களை வைத்து இயக்க பட்ஜெட் தாங்காது. அதனால்தான் விரலுக்கேற்ற வீக்கமாய் விமலை வைத்து படத்தை முடித்தேன். ஆனால், அடுத்து கண்டிப்பாக நாம் இணையப்போகிறோம் என்று கூறியுள்ளாராம் டைரக்டர் நாகேந்திரன்.

இரண்டு நிமிடம் இடை விடாது தொடர்ந்து பேசிய தனுஷின் மாஸ் டயலாக்


அப்பா, அம்மா கஷ்டப்பட்டு donation கட்டி LKG ல இருந்து பத்தாவது வரைக்கும் fail ஆகாம படிச்சி, பத்தாவதுல ஈஸி ஆன Group எல்லாம் விட்டுட்டு இந்த Group எடுத்தாதா Engineer ஆக முடியும் -ன்னு கஷ்டமான Group எடுத்து, Physics-க்கு ஒரு டியூசன் Chemistry-க்கு ஒரு டியூசன் Maths-க்கு ஒரு டியூசன்-ன்னு ரோடு ரோடா அலைய விட்டு, Public Exam-ல பசங்க நைட் எல்லாம் flask-ல டீ வச்சி, படிச்சி, காலைல அலாரம் வச்சி எந்திருச்சு , படுச்சு, அதுல வாங்குற மார்க் எல்லாம் பத்தாம, TNPC Exam-ku வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குற cut-off மார்க் fees கட்டமா போய் அம்மா நகைய அடமானம் வச்சு College-ல சீட் வாங்கி first year ல இருந்து 4th year வரைக்கும் உள்ள எல்லா Arrears-ஐயும் 4th year ல மொத்தமா clear பண்ணி, interview-la போயும் வேலை இல்லன்னு தெரிஞ்சு, செருப்பால அடிச்சு, ரோடு ரோடா வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டசோறு, தண்ட சோறு-ன்னு திட்டி சாப்புடுற ஒரு ஒரு சாப்பாடும் தொண்டல சிக்கி ,சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசனு வேல குடுத்தா, அதையும் புடுங்க நினைக்கற உண்ண மாறி ஒரு பொறம்போக்கு எல்லாம் சமாளிச்சு இங்க உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க !!!!

ஜித்தன் ரமேஷ் ஜோடியானர் இனியா!

ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம். இவர்கள் தவிர வி.டி.வி.கணேஷ், தம்பி ராமையா, மயில்சாமி சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரிஜினல் ஜித்தன் பட ஹீரோயின் பூஜாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா நடிக்கும் 'பேங் பேங்' தமிழிலும் வருகிறது...!

டாம் க்ரூஸ், கேமரூன் டயஸ் நடித்த ஹாலிவுட் படமான 'நைட் அன்ட் டே' படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீ-மேக் படமான 'பேங் பேங்' படத்தில் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இப்படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பராகுவே நாட்டில் நடைபெற்றது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். விஷால் - சேகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள். அபுதாபியில் படமாக்கப்படும் முதல் இந்தித் திரைப்படம் இது. அங்கு படத்தின் பல முக்கிய காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்தித் திரையுலக வரலாற்றிலேயே மிகவும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சி ஒன்றையும் அங்கு படமாக்கியிருக்கிறார்கள்.

தாய்லாந்து, கிரீஸ், சிம்லா, டில்லி ஆகிய இடங்களில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. 'எந்திரன்' படத்தில் வில்லனாக நடித்த டேனி டென்சோங்பா இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மிக அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாயத் தயாராகி வரும் இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன் வழக்கம் போலவே அசத்தலான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம். படத்தின் முதல் பார்வை வழக்கம் போல் ஹிந்தித் திரையுலகில் ஆச்சரிய அலைகளை உருவாக்கியுள்ளது.

'ஜிந்தகி நா மிலேகி டோபரா' படத்திற்குப் பிறகு ஹிருத்திக், கத்ரீனா ஜோடியின் காதல் நெருக்கத்தைக் கண்டு மிரண்ட ரசிகர்கள் இந்தப் படத்திலும் அவர்களின் காதல் காட்சிகளைக் கண்டு பொறாமைப்படுவார்களாம். இந்தப் படத்தை இந்தியில் மட்டுமல்லாது, 'தமிழ், தெலுங்கு' மொழிகளிலும் 'டப்' செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளியாகிறது.

நண்பர்களுக்கு ஓவியம் பரிசு: இது ஹன்சிகா ஸ்பெஷல்

படப்பிடிப்பு தலங்களில் தான், விளையாட்டு பிள்ளையாக இருப்பார், ஹன்சிகா. வீட்டிற்கு வந்துவிட்டால், தனக்கு பிடித்தமான ஓவியங்களை வரைவதில் ஆர்வமாகி விடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'பள்ளியில் படிக்கும்போதே, ஓவியப் போட்டிகளில் பலமுறை பரிசு வாங்கியுள்ளேன். விநாயகர், கிருஷ்ணா என, கடவுள்களின் படங்களை என் கற்பனையும் கலந்து, பக்தி பரவசம் தரும் வகையில் வரைந்து வைத்திருக்கிறேன்' என்கிறார். தன் மனசுக்கு பிடித்த உறவினர்கள், நண்பர்களுக்கு, தான் வரைந்த ஓவியங்களை அன்பளிப்பாகவும் கொடுத்து விடுவாராம்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி!

1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான முதல் படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த அவர். சமீபகாலமாக, கேரக்டர் நடிகராகி விட்டார். காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, புத்தகம் உள்பட பல படங்களில் தற்போது நடித்துள்ளார்.

இந்த நிலையில், அவரது முதல் படமான பன்னீர் புஷ்பங்கள் படத்தை இப்போது முற்றிலும் புதுமுகங்களைக்கொண்டு ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி., அப்படத்திற்கு ஏற்கனவே கதை எழுதிய டைரக்டர் ராஜேஷ்வர் மீண்டும் அந்த கதையை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப நவீன பாணியில் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம்.

அரண்மனை படத்தை முடித்துள்ள சுந்தர்.சி., அடுத்து விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை தற்போது இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே பன்னீர் புஷ்பங்கள் ரீமேக்கையும இயக்குகிறாராம். அனைத்து நடிகர் நடிகைகளுமே புதியவர்கள் என்பதால், ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விடும் திட்டம் உள்ளதாம்.

ஹாலிவுட் படம் தயாரிக்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் அதாவது எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிகரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்குள்ள ஹாலிவுட் ஸ்டூடியோவில் சினிமா கற்றிருக்கும் அவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: நான் ஹரிகேன் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் ஹாலிவுட் படங்களை தயாரிக்க இருக்கிறேன். சினிமா பரம்பரையில் இருந்து வந்ததால் என்னிடம் சினிமா ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. சர்வதேச அளவில் படம் தயாரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

முதல் கட்டமாக பிரமென் டவுன் மியூசிசியன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ஒரு மியூசிக்ல் சினிமா எடுக்க இருக்கிறோம். இது 45 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இசை சம்பந்தமான படம் என்பதால் உலக புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இசை அமைக்க பேச்சு நடந்து வருகிறது. இதுதவிர வோல்பெல் என்ற அனிமேஷன் படத்தை தயாரிக்க இருக்கிறோம். இதில் இந்திய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இரு படங்களும் உலக அளவில் பேசப்படுகிற படமாக இருக்கும். என்கிறார் பிரபாகரன்.

மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா - தமன்னா ஹீரோயின்!


சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகு ராஜா படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு இப்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளனர். இப்படத்தில் ஆர்யா ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்யாவுடன், தமன்னா இணையும் முதல்படம் இதுவாகும்.

ராஜேஷின் வழக்கமான படங்களை போன்று இந்தப்படமும் பக்கா காமெடி படமாக உருவாக இருக்கிறது. ராஜேஷ் படம் என்றால் அதில் சந்தானம் இல்லாமல் இருக்க மாட்டார். இந்தப்படத்திலும் அவர் நடிப்பார் என தெரிகிறது. தற்போது ஆர்யா, புறப்போக்கு, மீகாமன் படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் ராஜேஷ் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

Friday, 18 July 2014

பிரகதி அறிமுகமாகும் 'தாரை தப்பட்டை'





பாலா இயக்கத்தில் தயாராகும் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகிறார் பாடகி பிரகதி குருபிரசாத்.

சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார், ஸ்டூடியோ 9 சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க, பாலா இயக்கத்தில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் பிரகதி குருபிரசாத். இவர் சசிகுமாரின் தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே, பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் 'ஓர் மிருகம்' பாடல் மூலமாக தான் பிரகதி பாடகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கினாலும், முழுக்க முழுக்க தஞ்சாவூரில் தான் படமாக்கப்பட இருக்கிறது.

Has Rajini Really been Hospitalised???


Superstar Rajinikanth who is currently acting in Lingaa which is being directed by K.S.Ravikumar has been reported to have hospitalized, yesterday.

It was said that Rajini has fainted while shooting for a fight sequence and he has been immediately admitted to a nearby hospital.

But this has now become a rumour, after K.S.Ravikumar has reported to the media that there is no truth in the reports about his health and he is happily shooting for the film in Hyderabad

A grand Ceremony in Madurai for 'SuperStar Vijay'


'Who is the Next Superstar?' was the most recent hot controversy, for which Vijay and Ajith fans are in combat. This has started after a popular weekly magazine has conducted poll and has released the results claiming Vijay is the next superstar based on the number of votes.

This which has boosted the controversy has made the fans of Ajith to criticize the polls to the bottom level, and finally the controversy has left out unnoticed by time.

Meanwhile, now it has been announced that 'Superstar' Title will be awarded to Ilayathalapathi Vijay in a grand ceremony in Madurai on the Independence day (15th August 2014).

If reports are to be believed several Cinema Stars will be presiding over the function to felicitate 'Superstar Vijay'.
 

Aamir Khan denies Villain Role against Rajini!!



Aamir Khan who has been earlier reported in the media that he will be playing a villain against Rajinikanth in Enthiran 2.

But he has denied the news as rumours, and has commented as baseless.

Shankar who is currently planning to make the sequel of Enthiran 2, after completing his current film 'Ai' with Vikram, has not even started the pre-production works.

'Purampokku' Arya and Vijay Sethupathi in Jail!





Arya and Vijay Sethupathi who were much busy shooting for their respective films, have now together started shooting for 'Purampokku'.

The film being directed by S.P.Jananathan, has already completed a schedule of the shooting. The new Schedule has been launched today in Binny Mills and will shot for around for around 45 days.

A mega set of Prison has been erected there and they will be shooting the jail sequences of the film there.

Thursday, 17 July 2014

Shruti Hassan Confirmed in Vijay's Next!


Vijay who is currently busy in 'Kaththi' has already signed his next film with director Chimbudevan.

There were several news and rumours about the heroine of film. Finally it is confirmed that Shruti Hassan will be the heroine of this epic film.

She herself confirmed that by a tweet quoting "Am super happy to be vijay sirs leading lady in Chimbudevan's next! Time to make an epic film! #tamilponnu #excitement #superu #whatastory".

The film will be a periodic one and will soon be launched soon after Vijay completes his shooting for Kaththi.
Vijay who is currently busy in 'Kaththi' has already signed his next film with director Chimbudevan.
There were several news and rumours about the heroine of film. Finally it is confirmed that Shruti Hassan will be the heroine of this epic film.
She herself confirmed that by a tweet quoting "Am super happy to be vijay sirs leading lady in Chimbudevan's next! Time to make an epic film! #tamilponnu #excitement #superu #whatastory".
The film will be a periodic one and will soon be launched soon after Vijay completes his shooting for Kaththi.
- See more at: http://www.cineulagam.com/tamil/news/cinema/shruti-hassan-confirmed-in-vijays-next/#sthash.3NKMzaEr.dpuf
Vijay who is currently busy in 'Kaththi' has already signed his next film with director Chimbudevan.
There were several news and rumours about the heroine of film. Finally it is confirmed that Shruti Hassan will be the heroine of this epic film.
She herself confirmed that by a tweet quoting "Am super happy to be vijay sirs leading lady in Chimbudevan's next! Time to make an epic film! #tamilponnu #excitement #superu #whatastory".
The film will be a periodic one and will soon be launched soon after Vijay completes his shooting for Kaththi.
- See more at: http://www.cineulagam.com/tamil/news/cinema/shruti-hassan-confirmed-in-vijays-next/#sthash.3NKMzaEr.dpuf
Vijay who is currently busy in 'Kaththi' has already signed his next film with director Chimbudevan.
There were several news and rumours about the heroine of film. Finally it is confirmed that Shruti Hassan will be the heroine of this epic film.
She herself confirmed that by a tweet quoting "Am super happy to be vijay sirs leading lady in Chimbudevan's next! Time to make an epic film! #tamilponnu #excitement #superu #whatastory".
The film will be a periodic one and will soon be launched soon after Vijay completes his shooting for Kaththi.
- See more at: http://www.cineulagam.com/tamil/news/cinema/shruti-hassan-confirmed-in-vijays-next/#sthash.3NKMzaEr.dpuf
Vijay who is currently busy in 'Kaththi' has already signed his next film with director Chimbudevan.
There were several news and rumours about the heroine of film. Finally it is confirmed that Shruti Hassan will be the heroine of this epic film.
She herself confirmed that by a tweet quoting "Am super happy to be vijay sirs leading lady in Chimbudevan's next! Time to make an epic film! #tamilponnu #excitement #superu #whatastory".
The film will be a periodic one and will soon be launched soon after Vijay completes his shooting for Kaththi.
- See more at: http://www.cineulagam.com/tamil/news/cinema/shruti-hassan-confirmed-in-vijays-next/#sthash.3NKMzaEr.dpuf

Wednesday, 16 July 2014

Neil Nitin Mukesh: 'Johnny Gaddar' inspired my look in 'Kaththi'


Actor Neil Nitin Mukesh, who is playing antagonist in upcoming Tamil actioner "Kaththi", says he's gone back to the days of "Johnny Gaddar" for the look of his role in the new film. He says audiences will get to see a "leaner and sharper" Neil in the film.

"I'm shooting for two films simultaneously - 'Kaththi' and the Salman Khan-starrer with Sooraj Barjatya. I've designed my looks in such a way that I could easily blend into both the characters. For 'Kaththi', I've gone back to the days of 'Johnny Gaddar', which is an inspiration for my look in the film," Neil told IANS.