யூத், பகவதி தொடங்கி ஜெய் பல படங்களில் நடித்தாலும், அவருக்கு
மிகப்பெரிய பிரேக் கொடுத்தது சுப்பிரமணியபுரம் மற்றும் எங்கேயும் எப்போதும்
படங்கள்தான். சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் தவிர வேறு பலரும் நடித்ததால்
அப்படத்தின் வெற்றியை அவர் மட்டுமே அறுவடை செய்ய முடியாதநிலையில்,
எங்கேயும் எப்போதும் படம்தான் அவரை ஸோலோ ஹீரோவாக வெற்றி நடைபோட வைத்தது.
ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த இப்படத்தை அவரது உதவியாளராக சரவணன் இயக்கினார்.
எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றியை அடுத்து லிங்குசாமியின்
நிறுவனத்துக்கு இவன் வேற மாதிரி என்ற படத்தை இயக்கினார்.
விக்ரம்
பிரபு நடித்த இந்தப் படம் தோல்வியடைந்தது. அதன் காரணமாக சரவணனுக்கு
அடுத்து படம் இல்லாமல் போனது. அதுமட்டுமல்ல, அவரது இயக்கத்தில் நடிப்பதாக
சொன்ன ஹீரோக்களும் இவன் வேற மாதிரி படத்தின் தோல்வியினால் தங்களின் முடிவை
மாற்றிக் கொண்டனர். இந்நிலையில், ஜெய்யை சந்தித்து தன் தற்போதைய நிலையை
விளக்கி அவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் சரவணன். அவரது தற்போதையை சூழலை
எண்ணி வருத்தப்பட்ட ஜெய் உடனடியாய் அவருக்கு கால்ஷீட் தர ஒப்புக்கொண்டார்.
அதோடு தயாரிப்பாளரையும் கையைக்காட்டினார். பிறகென்ன..மளமளவென வேலைகள்
தொடங்க, சரவணன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் வலியவன் வேகமாக வளர்ந்த
வருகிறது.
No comments:
Post a Comment