படப்பிடிப்பு தலங்களில் தான், விளையாட்டு பிள்ளையாக இருப்பார், ஹன்சிகா. வீட்டிற்கு வந்துவிட்டால், தனக்கு பிடித்தமான ஓவியங்களை வரைவதில் ஆர்வமாகி விடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'பள்ளியில் படிக்கும்போதே, ஓவியப் போட்டிகளில் பலமுறை பரிசு வாங்கியுள்ளேன். விநாயகர், கிருஷ்ணா என, கடவுள்களின் படங்களை என் கற்பனையும் கலந்து, பக்தி பரவசம் தரும் வகையில் வரைந்து வைத்திருக்கிறேன்' என்கிறார். தன் மனசுக்கு பிடித்த உறவினர்கள், நண்பர்களுக்கு, தான் வரைந்த ஓவியங்களை அன்பளிப்பாகவும் கொடுத்து விடுவாராம்.
No comments:
Post a Comment