ஜெயம் ரவியைப்பொறுத்தவரை ரொம்ப யதார்த்தமான மனிதர். சினிமா மேடைகளில்
மனதில் பட்டதை ஓப்பனாக சொல்லி விடுவார். அதேப்போல், தான் நடிக்கும்
படங்களின் இயக்குனர்களை சார் என்று அழைக்காமல் அண்ணன் என்றே உரிமையோடு
அழைப்பார். இதனால்தான் ஜெயம் ராஜாவுக்கு மட்டுமின்றி அவரை வைத்து படம்
இயக்கிய அத்தனை இயக்குனர்களுக்குமே தம்பியாக இருந்து வருகிறார் ஜெயம்ரவி.
இந்த
நிலையில், விமல் நடித்துள்ள நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தை
இயக்கியுள்ள நாகேந்திரனை, வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்றே அழைக்கிறார்
ஜெயம்ரவி. அவர் இப்போதுதான் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் பிறகெப்படி
உங்களுக்கு அண்ணன் ஆனார்? என்று அவரைக்கேட்டால், சினிமா உலகில் நடிக்கிற
முக்கிய விழாக்கள் மட்டுமின்றி, யாருக்கு எந்த பிரச்னை என்றாலும் அதை தனது
பிரச்னை போன்று நினைத்து முதல் ஆளாக வந்து நிற்பார் நாகேந்திரன்.
அதனால்
அவர் உதவி இயக்குனராக வேலை செய்த படங்களில் நான் நடிக்கவில்லை என்றாலும்,
நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பியாகவே பழகி வருகிறோம் என்று சொல்லும்
ஜெயம்ரவி, தற்போது அவர் இயக்கியுள்ள நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின்
டீசரைப்பார்த்தவர், இந்த படத்தில் என்னை நடிக்கக் கேட்டிருக்கக்கூடாதா?
என்றும் கேட்டு விட்டாராம். அதற்கு, உங்களை வைத்து இயக்க பட்ஜெட்
தாங்காது. அதனால்தான் விரலுக்கேற்ற வீக்கமாய் விமலை வைத்து படத்தை
முடித்தேன். ஆனால், அடுத்து கண்டிப்பாக நாம் இணையப்போகிறோம் என்று
கூறியுள்ளாராம் டைரக்டர் நாகேந்திரன்.
No comments:
Post a Comment