Amazon

Flipkart

Adsense

Friday, 18 July 2014

பிரகதி அறிமுகமாகும் 'தாரை தப்பட்டை'





பாலா இயக்கத்தில் தயாராகும் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகிறார் பாடகி பிரகதி குருபிரசாத்.

சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார், ஸ்டூடியோ 9 சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க, பாலா இயக்கத்தில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் பிரகதி குருபிரசாத். இவர் சசிகுமாரின் தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே, பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் 'ஓர் மிருகம்' பாடல் மூலமாக தான் பிரகதி பாடகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கினாலும், முழுக்க முழுக்க தஞ்சாவூரில் தான் படமாக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment