Amazon

Flipkart

Adsense

Saturday, 19 July 2014

பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி!

1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான முதல் படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த அவர். சமீபகாலமாக, கேரக்டர் நடிகராகி விட்டார். காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, புத்தகம் உள்பட பல படங்களில் தற்போது நடித்துள்ளார்.

இந்த நிலையில், அவரது முதல் படமான பன்னீர் புஷ்பங்கள் படத்தை இப்போது முற்றிலும் புதுமுகங்களைக்கொண்டு ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி., அப்படத்திற்கு ஏற்கனவே கதை எழுதிய டைரக்டர் ராஜேஷ்வர் மீண்டும் அந்த கதையை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப நவீன பாணியில் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம்.

அரண்மனை படத்தை முடித்துள்ள சுந்தர்.சி., அடுத்து விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை தற்போது இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே பன்னீர் புஷ்பங்கள் ரீமேக்கையும இயக்குகிறாராம். அனைத்து நடிகர் நடிகைகளுமே புதியவர்கள் என்பதால், ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விடும் திட்டம் உள்ளதாம்.

No comments:

Post a Comment