கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள வானவராயன்
வல்லவராயன் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. கிருஷ்ணா அதற்கு
பிறகு நடித்த யாமிருக்க பயமே வெளிவந்து விட்டது. அடுத்து வன்மம் படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். வானவராயன் வல்லவராயன் படத்தை கிருஷ்ணாவின்
தந்தை பட்டியல் சேகர் தன் நண்பர் ஒருவருடன் இணைந்து தயாரித்தார். தற்போது
படத்தை டாக்டர் சிவபாலன் என்பவர் தனது ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற
நிறுவனத்துக்காக வாங்கி விட்டார். ஆகஸ்டில் வெளியிட
திட்டமிட்டிருக்கிறார்.
இதுகுறித்து படத்தின்
இயக்குனர் ராஜுமோகன் கூறியதாவது: ஒரே தட்டில் சாப்பிடும் அண்ணன் தம்பிகளை
பார்த்திருக்கிறோம். இது ஒரு தட்டுக்காக அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பி
கதை. அண்ணனாக மா.பா.கா ஆனந்தும், தம்பியாக கிருஷ்ணாவும்
நடித்திருக்கிறார்கள். அதே பாசத்திலும் அடித்துக் கொள்வார்கள். அவர்கள்
எப்போது சந்தோஷமாக இருப்பார்கள், எப்போது சண்டை போடுவார்கள் என்று
அவர்களுக்கே தெரியாது.
30 முறை காதலில் தோற்ற
கிருஷ்ணாவுக்கு மோனல் கஜ்ஜாரை அண்ணன் ஆனந்த் எப்படி கோர்த்து விடுகிறார்
என்பதை காமெடியாக காட்டும் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி
நடித்திருக்கிறார். படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் படத்தை மொத்தமாக
வாங்கி விட்டார். ஆகஸ்ட்டில் வெளியிடுகிறார். என்றார் ராஜுமோகன்.
No comments:
Post a Comment