Amazon

Flipkart

Adsense

Sunday, 20 July 2014

யான் பாடல் காட்சியில் ஜீவா, துளசிக்கு 100 உடைகள்

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் படம் முடிந்தபாடில்லை. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி இருக்கிறது.
இதற்காக பட யூனிட் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது. அங்கு இரண்டு பாடல் காட்சிகளையும் எடுத்து திரும்ப இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடாவில் படமாக்க திட்டம். இதில் ஒரு பாடல் முழுக்க சுவிட்சர்லாந்தில் இதுவரை படம் எடுக்காத லொக்கேஷன்களில் எடுக்க இருக்கிறார்கள். இந்த பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகள் அணிய இருக்கிறார்கள். இதற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தனி பார்சலாக சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஒரு ஷாட்டுக்கு ஒரு உடை அணிந்து ஆடுவார்களாம்.

No comments:

Post a Comment