Amazon

Flipkart

Adsense

Thursday, 24 July 2014

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கி விடும் தனுஷ்!

முன்பெல்லாம் ரஜினி-கமல் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. குறிப்பாக, ரஜினி நடித்த கோச்சடையான் திரைக்கு வந்தபோது பல படங்கள் வரிந்து கட்டி நின்றன. இதனால் கோச்சடையான்தான் சிலதடவை பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2-ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இந்த சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார்கள் என்றுதான் கருதினர். ஆனால், அதே நாளில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாணா படத்தை வெளியிட முடிவே செய்து விட்டார்களாம்.

கமல் சார் படம் வருது, இந்த நேரத்துல சின்ன படத்தை வெளியிட வேண்டுமா? என்று சிலர் அப்பட தயாரிப்பாளரான தனுஷிடம் கேட்டதற்கு, எது சின்ன படம், எது பெரிய படம் என்பதை முடிவு செய்வது நாமல்ல ரசிகர்கள்தான். அதோடு, இப்பல்லாம் நடிகர்களுக்காக எந்த படமும் ஓடுறது இல்லை. கதைக்காகத்தான் படம் ஓடுது. அந்த வகையில் டாணா படத்தை நான் கதையை நம்பித்தான் எடுத்திருக்கேன். அதனால் எனக்கு எந்த படத்தைக்கண்டும் பயமில்லை என்றாராம் தனுஷ்.

No comments:

Post a Comment