விக்ரம் நடித்த சேது படத்தில் நடிக்க வேண்டியவர் விக்னேஷ். அப்போது
விக்னேஷ் பெரிய நடிகர், விக்ரம் ராசியில்லாத நடிகர்உவிக்னேஷ் கால்ஷீட்
கிடைக்காமல் பாலா விக்ரமை நடிக்க வைத்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக
சினிமாவில் போராடும் விக்னேஷ்க்கு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம்
அமையவில்லை. கிழக்கு சீமையிலே, பசும்பொன், உழவன், கண்ணெதிரே தோன்றினாள்,
ஆச்சார்யா, ஈசா, உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.
கடைசியாக புவனக்காடு என்ற படத்தில் நடித்தர்.
தற்போது
விக்கேனஷ் அவன் அவள் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். தேவி
மகாதேவன், சந்திரிகா என்ற இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா
இசை அமைக்கிறார், ரவி சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
"ஒரு
குற்றத்தை செய்து விட்டு அடர்ந்த காட்டுக்குள் தலைமறைவாகிறார் விக்னேஷ்.
அந்த காட்டுக்குள் ஒரு பங்களா இருக்கிறது. அதில் ஒரு பெண் தனியாக
வாழ்கிறாள். விக்னேசுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த பெண்ணிடம் தன்னை
கொடுக்கிறார் விக்னேஷ். ஒரு நாள் உறவு முடிந்ததும் அந்த பெண் மறைந்து
விடுகிறாள். அவள் யார் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது திகில்
சமாச்சாரங்கள்" என்கிறார் இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளி.
விதவிதமான படங்களில் நடித்து விட்ட விக்னேஷ்க்கு இந்த திகில் படம் கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.
No comments:
Post a Comment