Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

விஜய்-அட்லி இணையும் படத்தில் புதிய மாற்றம்

27bd7a7a-4584-451e-b92c-bcfa9b5e520d_S_secvpf 
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவரது 59-வது படத்தை அட்லி இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது, இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்துள்ளனர்.
அதாவது, முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் சுமார் ஒரு மாத காலம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக இப்படத்தின் போட்டோ ஷுட் பணிகளை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போட்டோ ஷுட் நடத்துவதற்காக சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம் முழுவதும் அங்கு போட்டோ ஷுட் நடக்கும் என தெரிகிறது. அதன்பிறகே, படக்குழுவினர் சீனாவில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுதான் தயாரிக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது முறையாக திருமணம் செய்யப்போகிறேன்- அதிர்ச்சியளித்த அடா ஷர்மா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அடா ஷர்மா. பாலிவுட்டில் பிஸியாக இருந்த இவரை இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் தென்னிந்தியா பக்கம் கொண்டு வந்தார்.
இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஐந்தாவது முறையாக திருமணம் செய்யப்போகிறேன்’ என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவர் விளக்கம் கொடுப்பதற்குள் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு தான் தெரிந்தது இவர் நடித்த படங்களில் இதுவரை 4 படங்களில் திருமணம் செய்வது போல் காட்சி இருந்ததாம், தற்போது புதிய படத்திலும் இப்படி ஒரு காட்சி வர, அதை தான் கூறினாராம். நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!.

Thursday, 11 June 2015

Finally, Simbu gets a break

Though Simbu hasn't released any films in the recent years, he is still one of the busiest actors in Kollywood. He has numerous films on a pipeline.
Simbu has recently started shooting for two of his upcoming films - Acham Yenbathu Madamaiyada with Gautham Menon and 'Kaan' with Selvaraghavan.
He has acted in both the films simultaneously, and has now completed a schedule of both the films. So the actor has planned to take a break.
He has tweeted "Done with a marathon of continuous shoot for more than 1nhalf months for both #AYM and #KAAN ... Finally a break :)"

When Bhavana denied to act with Ilayathalapathy Vijay?

Actress Bhavana who is now busy in Malayalam films, is also a popular one among the Kollywood fans. Her films like Deepavali, Chithiram Pesuthadi has earned her good fame.
The actress has now revealed a shocking news, that she has missed a chance to act in Vijay's upcoming big budget movie 'Puli'.
She said that she is now regretting with her inability to accept that chance, due to her prior schedules.
It is to note that that Nandita was then roped in for that role.

விஜய்யை அடுத்து சூர்யாவும் உதவி கரம் நீட்டினார்

இளைய தளபதி விஜய் எப்போதும் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவர் இயக்குனர் சங்கம் சார்பில் கட்டப்படும் திரையரங்கிற்கு பல லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தன்னால் முடிந்த நன்கொடையை கொடுத்துள்ளார்.
இந்த திரையரங்கு மூலம் சிறு பட்ஜெட் படங்கள், பல குறும்படங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என கூறியுள்ளனர்.

தன்னை கலாய்த்த தொலைக்காட்சிக்கு பதிலடி கொடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

சின்னத்திரையில் இருந்து தான் பலரும் வெள்ளித்திரைக்கு வருவார்கள். சினிமாவில் மார்க்கெட் சரிந்த ஒரு சிலர் தான் சீரியல், ரியாலிட்டி ஷோ நோக்கி செல்வார்கள்.
இந்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’வசனத்தை ஒரு பிரபல தொலைக்காட்சியில் கிண்டல் செய்து பெரிய ஹிட் அடித்தனர்.
தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் இயக்கி வரும் அம்மனி படத்தில் பல வசனங்கள் வைத்துள்ளாராம்.

சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலிஸா? குழப்பத்தில் மக்கள்

'நாளை முதல் சிவகார்த்திகேயன் அதிரடி ஆரம்பம்' என பல போஸ்டர்களில் இவர் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த பலரும் ‘என்னடா இது... அவர் நடித்த ரஜினி முருகன் படத்தின் பாடல்கள் கூட இன்னும் ரிலிஸாகவில்லை, அப்பறம் எப்படி’ என்று புலம்பி வருகின்றனர்.
ஆனால், உண்மையாகவே சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலிஸாகின்றது, முதன் முறையாக இவர் கெஸ்ட் ரோலில் நடித்த வஜ்ரகயா என்ற கன்னட படம் தான் அது.
அதை தமிழகத்தில் விளம்பரப்படுத்த சிவகார்த்திகேயனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த போஸ்ட்ரை தான் அனைவரும் பார்த்துள்ளனர்.