Amazon

Flipkart

Adsense

Wednesday, 10 June 2015

தன்னை பற்றிய ஆபாச கருத்திற்கு பதிலடி கொடுத்த விசாகா சிங்

தற்போதைய சமூக வலைத்தளங்களில் பிரபலங்களுக்கு எப்போதும் ஒரு விதமான பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இந்த பிரச்சனையை சந்தித்து இதற்கு பதிலடி கொடுத்தவர் தான் விசாகா சிங்.
இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர். பேஸ்புக் பக்கத்தில் விசாகா தன் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்தார்.
இதில் கருத்து பகிர்வில் ஒரு இளைஞர் மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக சில கமெண்ட்டுக்களை தெரிவிக்க, ’உன்னுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை புகைப்படத்தை முதலில் நீக்கு. தைரியம் இருந்தால் உன்னுடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் போட்டு, இந்த மாதிரி கருத்துக்களைப் பதிவிடு. என்னுடைய மார்பு அழகுதான்.
இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி கமெண்ட் அடிப்பாயா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசு. இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்’ பதிலடி கொடுத்தார்.
இதை தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment