Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

விஜய்-அட்லி இணையும் படத்தில் புதிய மாற்றம்

27bd7a7a-4584-451e-b92c-bcfa9b5e520d_S_secvpf 
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவரது 59-வது படத்தை அட்லி இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது, இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்துள்ளனர்.
அதாவது, முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் சுமார் ஒரு மாத காலம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக இப்படத்தின் போட்டோ ஷுட் பணிகளை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போட்டோ ஷுட் நடத்துவதற்காக சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம் முழுவதும் அங்கு போட்டோ ஷுட் நடக்கும் என தெரிகிறது. அதன்பிறகே, படக்குழுவினர் சீனாவில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுதான் தயாரிக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment