Amazon

Flipkart

Adsense

Thursday, 11 June 2015

தன்னை கலாய்த்த தொலைக்காட்சிக்கு பதிலடி கொடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

சின்னத்திரையில் இருந்து தான் பலரும் வெள்ளித்திரைக்கு வருவார்கள். சினிமாவில் மார்க்கெட் சரிந்த ஒரு சிலர் தான் சீரியல், ரியாலிட்டி ஷோ நோக்கி செல்வார்கள்.
இந்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’வசனத்தை ஒரு பிரபல தொலைக்காட்சியில் கிண்டல் செய்து பெரிய ஹிட் அடித்தனர்.
தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் இயக்கி வரும் அம்மனி படத்தில் பல வசனங்கள் வைத்துள்ளாராம்.

சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலிஸா? குழப்பத்தில் மக்கள்

'நாளை முதல் சிவகார்த்திகேயன் அதிரடி ஆரம்பம்' என பல போஸ்டர்களில் இவர் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த பலரும் ‘என்னடா இது... அவர் நடித்த ரஜினி முருகன் படத்தின் பாடல்கள் கூட இன்னும் ரிலிஸாகவில்லை, அப்பறம் எப்படி’ என்று புலம்பி வருகின்றனர்.
ஆனால், உண்மையாகவே சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலிஸாகின்றது, முதன் முறையாக இவர் கெஸ்ட் ரோலில் நடித்த வஜ்ரகயா என்ற கன்னட படம் தான் அது.
அதை தமிழகத்தில் விளம்பரப்படுத்த சிவகார்த்திகேயனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த போஸ்ட்ரை தான் அனைவரும் பார்த்துள்ளனர்.

Wednesday, 10 June 2015

Who will not love to work with Ajith? Trisha asks

Social media is the buzz word now and film stars regularly interact with their fans directly to get to know the pulse of the audience and also establish that personal bond with their fans.

Recently Trisha interacted with her followers in a chat session in twitter and she answered most of their queries. When asked about her favorite movie with Ajith, Trisha mentioned that it was Yennai Arindhaal and also added that 'Who would not like to work with Ajith?"

She also mentioned that her only regret in the film industry is that she is yet to team with the superstar Rajinikanth. She also had good words for co-stars like Vikram, Suriya and Vijay. She described Jyothika's come back in 36 Vayadhinile as a huge inspiration for women and said she would love to indulge in her favorite dishes in Sandys, Golden Dragon and Southern Spice in Chennai.

தன்னை பற்றிய ஆபாச கருத்திற்கு பதிலடி கொடுத்த விசாகா சிங்

தற்போதைய சமூக வலைத்தளங்களில் பிரபலங்களுக்கு எப்போதும் ஒரு விதமான பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இந்த பிரச்சனையை சந்தித்து இதற்கு பதிலடி கொடுத்தவர் தான் விசாகா சிங்.
இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர். பேஸ்புக் பக்கத்தில் விசாகா தன் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்தார்.
இதில் கருத்து பகிர்வில் ஒரு இளைஞர் மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக சில கமெண்ட்டுக்களை தெரிவிக்க, ’உன்னுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை புகைப்படத்தை முதலில் நீக்கு. தைரியம் இருந்தால் உன்னுடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் போட்டு, இந்த மாதிரி கருத்துக்களைப் பதிவிடு. என்னுடைய மார்பு அழகுதான்.
இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி கமெண்ட் அடிப்பாயா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசு. இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்’ பதிலடி கொடுத்தார்.
இதை தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

தரமான படங்களை கௌரவிக்க விஜய் கொடுத்த ரூ 15 லட்சம்


இளைய தளபதி விஜய் எப்போதும் யார் கஷ்டத்தில் இருந்தாலும் முன் வந்து உதவக்கூடியவர். இவர் இயக்குனர் சங்கம் புதிதாக கட்டும் திரையரங்கு ஒன்றிற்கு ரூ 15 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார்.
இதுதவிர்த்து புதிதாக ஒரு Auditorium கட்டவும் விஜய் பணம் கொடுத்துள்ளார். இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் , சினிமா துறையைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்துள்ள இந்த Auditorium மறைந்த மாபெரும் இயக்குநர் கே.பாலசந்தரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பல தரமான சிறு பட்ஜெட் படங்களும் மற்றும் குறும்படங்களும் ஒளிப்பரப்பப்படும் என கூறியுள்ளனர்.

சந்தானம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியம்- இதோ உங்களுக்காக

சந்தானம் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர் தமிழில் இதுவரை 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மலையாளம், தெலுங்கில் கூட தலா ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால், சந்தானம் ஒரு பாலிவுட் படத்திலும் நடித்தது, எத்தனை பேருக்கு தெரியும்.
இவர் 10 வருடங்களுக்கு முன்பு ’சின்ன மன்னு’என்ற பாலிவுட் படத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல் கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் இறந்ததால், இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது, இதற்கு பிறகு பல பாலிவுட் பட வாய்ப்பு வந்தும் சந்தானம் மறுத்து விட்டார்.

நயன்தாராவின் அழகிழந்த இந்த நிலைமைக்கு இது தான் காரணமாம்

நேற்று வெளிவந்த நயன்தாரா புகைப்படம் ஒன்றை பார்த்து ரசிகர்கள் இரத்த கண்ணீர் வடித்தனர். ஏன் இவருக்கு என்ன ஆச்சு என எல்லோரும் திகைத்து தான் போனார்கள்.
ஏனெனில் மிகவும் மெலிந்து, முகத்தில் பழைய அழகை இழந்து காணப்பட்டார். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
நானும் ரவுடி தான் படத்திற்காக நயன்தாரா தான், கொடுத்த கால்ஷிட்டை விட அதிக நாட்கள், குறைந்த சம்பளத்தில் இரவு-பகல் என ஏதும் பார்க்காமல் நடித்து கொடுத்தாராம். இதனால், தான் இவரின் பழைய அழகு கொஞ்சம் குறைந்துள்ளதாம்.